பான் இந்திய சூப்பர் ஹீரோ பட்டத்துடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ், தற்போது "துர்கா" மற்றும் "அதிகாரம்" ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் நடிக்க இருக்கும் 25வது திரைப்படத்திற்கு "காலபைரவா" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இன்று ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் உள்ளது.
மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என நான்கு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A new SUPERHERO among us emerges🔥
— Ramesh Varma (@DirRameshVarma) October 29, 2024
Gear up for an EPIC ACTION ADVENTURE. #RL25 is #KaalaBhairava - The World Within💥💥
Happy Birthday @offl_Lawrence 🎉
A Pan India Super Hero Film🤩#KaalaBhairavaFirstLook #RaghavaLawrence25#NeeladriProductions A #HawwishProduction… pic.twitter.com/hHRUMQmyQy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com