ராகவா லாரன்ஸ் 25வது படம்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அட்டகாசமான போஸ்டரும் வெளியாகிய நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகம் ஆகி அதன்பின் நடிகர் மற்றும் இயக்குனராக ஜொலித்தவர் ராகவா லாரன்ஸ். அவர் தற்போது ’அதிகாரம்’ ’துர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25வது படத்தின் அறிவிப்பு சற்றுமுன் இயக்குனர் ரமேஷ் வர்மா வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய ஆக்சன் படம் என்று இந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து படம் வெற்றி அடைய அனைவரும் ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

அடுத்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கிறேன்: லெஜண்ட் சரவணன் பேட்டி..!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் 2022 ஆம் ஆண்டு 'லெஜெண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அருள் சரவணன் நடிக்கும்

ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர்.. விஜய்யின் 'தளபதி 69' அறிவிப்பு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..

ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் என்ற கேப்ஷனுடன் விஜய் நடிக்கும் 'தளபதி 69' படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் மிகப் பெரிய சோகம் நிகழ்ந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் கருணாகனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதியுதவி.. ரஜினிகாந்த் மகள் அறிவிப்பு..!

ஒவ்வொரு வருடமும் இயக்குனர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி இருப்பதை அடுத்து அவருக்கு இயக்குனர்

சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வெளியாவதால்...