ராகவா லாரன்ஸ் 25வது படம்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அட்டகாசமான போஸ்டரும் வெளியாகிய நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகம் ஆகி அதன்பின் நடிகர் மற்றும் இயக்குனராக ஜொலித்தவர் ராகவா லாரன்ஸ். அவர் தற்போது ’அதிகாரம்’ ’துர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25வது படத்தின் அறிவிப்பு சற்றுமுன் இயக்குனர் ரமேஷ் வர்மா வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய ஆக்சன் படம் என்று இந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து படம் வெற்றி அடைய அனைவரும் ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
BIG ACTION ADVENTURE BEGINS 🔥
— Raghava Lawrence (@offl_Lawrence) September 14, 2024
I Need all your blessings for this special one 🙏🏼 #RL25 https://t.co/9VaKOc4sYZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com