சுஜித் இழப்பை ஈடுகட்ட பெற்றோர்களுக்கு ராகவா லாரன்ஸ் கூறிய யோசனை!
- IndiaGlitz, [Tuesday,October 29 2019]
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித், நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டு தற்போது மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டான். சிறுவன் சுஜித்தின் இழப்பு அவனுடைய பெற்றோர்களுக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு ஆகும். இந்த இழப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது என்பதே உண்மை நிலை
இந்த நிலையில் சுஜித்தின் பெற்றோர்களுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு யோசனை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச் சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.
இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் இன்று ராகவா லாரன்ஸ் அவர்களின் பிறந்த நாள் என்பதும், சுஜித் மறைவு காரணமாக அவர் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டட்தை தவிர்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
#RIPSurjith pic.twitter.com/hmC5HL1dD1
— Raghava Lawrence (@offl_Lawrence) October 29, 2019