கேள்விப்பட்டதைவிட அதிகம், உடனே கிளம்பி வாருங்கள்: ராகவா லாரன்ஸ் அழைப்பு

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

கஜா புயல் சேதங்கள் கேள்விப்பட்டதைவிட அதிகம் இருப்பதாகவும், இந்த சேதத்தை சரிசெய்ய அனைவரும் இணைந்தால் மட்டுமே முடியும் என்றும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் வீடுகளை இழந்த 50 பேர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் இன்று சேத நிலைமையை நேரில் கண்டறிய டெல்டா பகுதிக்கு சென்ற ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னையில் இருந்து நான் கேள்விப்பட்டதைவிட இங்கு நேரில் வந்து பார்க்கும்போதுதான் சேதத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது என்று தெரிகிறது. இந்த சேதத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் நாம் அனைவரும் இணைந்து உதவி செய்தால் மட்டுமே சாத்தியம். எனவே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உதவி செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

More News

தனுஷின் 'மாரி 2' குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்ற தகவல் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பை தனுஷ் அறிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண களத்தில் இறங்கிய மும்தாஜ் ஆர்மிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர், நடிகைகளும், அவர்களது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னலம் கருதாது நிவாரண பணிகளை செய்து வருகின்ரனர்.

தனுஷின் 'மாரி 2' சென்சார் தகவல்கள்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டினேனா? பத்திரிகையாளர்களை விளாசும் காயத்ரி ரகுராம்

நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் அபராதம் கட்டியதாக முன்னணி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரொமான்ஸ் காமெடி படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகில் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.