அமெரிக்க ஒபன் கோப்பையை வென்ற 18 வயது வீராங்கனை… குவியும் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் 18 வயதான பிரிட்டன் விராங்கனை எம்மா ரடுகானு. மேலும் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி வந்த ஒருவர் அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வதும் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை எம்மா ரடுகானு உலகத் தரவரிசையில் 150 ஆவது இடத்தில் உள்ளார். இவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் கனட வீராங்கனை லேலா பெர்னான்டஸை எதிர்த்துப் போட்டியிட்டு 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.
உலகத்தரவரிசையில் 73 ஆவது இடத்தில் இருந்த கனடா வீராங்கனையை எம்மா இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்றது குறித்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் தகுதிச்சுற்றுப் போட்டிக்காக விளையாடி வந்த ஒரு வீராங்கனை இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடி அதுவும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் கோப்பை போட்டியில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் இவர் வெற்றிருக்கிறார். இதற்கு முன்பு கடந்த 1977 ஆம் ஆண்டு விர்ஜினியா வேட் எனும் பிரிட்டன் விராங்கனை அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடி பட்டம் வென்றார். அதற்கு பிறகு 18 வயதான எம்மா இந்த சாதனையை முறியடித்து பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற எம்மாவை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டியுள்ளார். மேலும் பட்டம் வென்ற எம்மாவிற்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனையை அடுத்து ரசிகர்கள் எம்மா ரடுகானுவிற்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
The pride of Britain. ???? @EmmaRaducanu | #USOpen pic.twitter.com/mqYqJOywsv
— Live Tennis (@livetennis) September 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments