அமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா!

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

’கௌன் பனேகா குரோர்பதி’ என ஹிந்தியில் அமிதாப் பச்சனும், ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்று தமிழில் சூர்யாவும் நடத்திய நிகழ்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் சரியான கேள்விகளுக்கு பதில் அளித்தால் ஒரு கோடி வரை பரிசை வெல்லலாம் என்பதுதான் போட்டி.

இந்த போட்டிக்கு ஆடியன்ஸ்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ என்ற போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான விளம்பரங்கள் தற்போது அந்த தொலைக்காட்சியில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா தொகுத்து வழங்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

இந்த தகவலை தற்போது ராதிகா உறுதி செய்துள்ளார். முதல்முறையாக பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 

More News

மும்பை பப்பில் ஆட்டம் போட்ட மீராமிதுன்: நெட்டிசன்கள் விளாசல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நான்கு வாரங்கள் மட்டுமே மீராமிதுன் இருந்தபோதிலும் கிட்டத்தட்ட அனைவரிடமும் பிரச்சனை செய்துவிட்டார். குறிப்பாக சேரன் தவறான நோக்கத்துடன்

'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு  டாக்டர் ராமதாஸ் கேள்வி

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை நேற்று பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். 

பெண் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

முக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும்

'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள தளபதி விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்களின்