ஒலிம்பிக் பதக்க வீராங்கனையுடன் நடிகை ராதிகா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். மேலும் கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
இவரது வெற்றியை இந்திய நட்சத்திரங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரதமர் மோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைத்து வீரர், வீராங்கனைகளையும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அதுகுறித்த புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பி.வி.சிந்து “இறுதியாக பிரதமர் மோடியுடன் ஐஸ் க்ரீம் சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி“ எனப் பதிவிட்டு இருந்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் 70ஸ் களில் இருந்து ஆதிக்கம் செலுத்திவரும் நடிகை ராதிகா பி.வி.சிந்துவை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் வென்ற வெண்கலப் பதக்கத்தையும் காண்பித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் சிரஞ்சீவி, ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்துவை பாராட்டும் விதமாக பாராட்டு கூட்டம் நடத்தியதாகவும் அந்தக் கூட்டத்தில் நடிகை ராதிகா பி.வி.சிந்துவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நடிகை ராதிகா கடந்த 1978 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தில் அறிமுகமானவர். சமீபத்தில் தன்னுடைய 43 வருட சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் “அருண்விஜய் 33“ திரைப் படத்திலும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The bronze, which is more than gold????????????????❤️❤️❤️❤️@Pvsindhu1 the feeling says it all pic.twitter.com/PKdolFiNch
— Radikaa Sarathkumar (@realradikaa) August 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments