58 வயதில் வேற லெவல் வொர்க்-அவுட்: ராதிகாவின் வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

கடந்த 1978ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா. அதன் பின் அஜித், விஜய் உள்பட இன்றைய மாஸ் நடிகர்களின் அம்மா கேரக்டரில் நடித்த நடிகை ராதிகா, சின்னத்திரையில் பிசியாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராதிகாவுக்கு தற்போது 58 வயது ஆகியுள்ள நிலையில் இந்த வயதிலும் அவர் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் செய்யும் ஒர்க்கவுட் வீடியோக்கள் ராதிகாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இந்த வயதிலும் உடம்பை கட்டுகோப்பாக வைத்திருக்கும் சரத்குமார்-ராதிகா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது