ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட திடீர் சோதனை!

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறப்பு ஜெயில் தண்டனை விதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பிலிருந்து இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் இருவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ராதிகாவுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சரத்குமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் தற்போது ராதிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராதிகா சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.