அஜித் கருத்துக்கு ராதிகா ஆதரவு

  • IndiaGlitz, [Thursday,April 21 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்ட மக்களிடம் ஏன் பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் கருத்தை தான் வரவேற்பதாக நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அஜித்தின் கருத்தை விஜய்யும் ஏற்றுக்கொண்டதால்தான் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அவர் வரவில்லை என்றும் ராதிகா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, கணவர் சரத்குமார் மற்றும் தானும் நடிகர் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிமாநில நடிகர்களை அழைத்திருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளூர் நடிகர்களுக்கு அழைப்பு விடுக்காதது வேதனையாக இருப்பதாகவும், தங்களை புறக்கணிக்கும் அளவுக்கு தாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கையில், "சரத்குமார், ராதிகா, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை விளக்கம் கேட்டு சோகாஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அதே நேரத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவரும் போட்டி முடியும் வரை கலந்து கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

More News

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனாலும், செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக திரையிடப்படவில்லை....

கவுதம் மேனனின் இரண்டு படங்களிலும் ஒரே இசையமைப்பாளர்

செல்வராகவன் இயக்கி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தில் இசையமைப்பதாக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக யுவன்ஷங்கர்...

நட்சத்திர கிரிக்கெட்: அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி ரசிகர்களை கவர்ந்ததோ...

'நேரம்' நிவின்பாலி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'நேரம்' படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமான நிவின்பாலி,

ரிலீசுக்கு முன்பே சாதனையை தொடங்கியது 'கபாலி'

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விஜய்யின் 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பதை பார்த்தோம்...