உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள்: விஷாலை கடுமையாக விமர்சித்த ராதிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியினர் வெளியிட்ட ஒரு பிரச்சார வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி வெளியிட்ட கருத்தை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ராதிகா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
23ஆம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா?
உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா?
இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது.
இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்.
இவ்வாறு நடிகை ராதிகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Truth will Prevail,
— Vishal (@VishalKOfficial) June 13, 2019
We stand by Truth....#NadigarSangamBuilding2019#VoteForPaandavarAni#June23Election
Full Video @: https://t.co/I44nSfB4wd pic.twitter.com/HHpIiLVLfx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments