தேர்தலில் தோல்வி அடைந்த சில நாட்களில் கனிமொழியை சந்தித்த நடிகை ராதிகா. .என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர் திமுக எம்பி கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா, தேமுதிக வேட்பாளராக கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் காங்கிரஸ் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவருக்கும் இடையே மட்டுமே கடும் போட்டி இருந்தது என்பதும் ராதிகா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளியான சில நாட்களில் நடிகை ராதிகா தனது மகள் வரலட்சுமி உடன் திமுக எம்பி கனிமொழி மற்றும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகிய இருவரையும் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி திருமணத்தை அடுத்து அழைப்பிதழ் கொடுப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை நடிகை வரலட்சுமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Such a dynamic personality..Lovely meeting you mam..such a pleasure always.. @KanimozhiDMK congratulations on your win as well...thank you Rajithiamma for meeting with us..@realradikaa pic.twitter.com/4eO0DGyb8m
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) June 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com