சென்னையில் ராதிகா போட்டி: எந்த தொகுதியில் தெரியுமா?

சமீபத்தில் ’சித்தி’ எந்த தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகிய நடிகை ராதிகா முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ராதிகா கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ராதிகா சரத்குமார் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் அந்த தொகுதியில் அவரை வெற்றி பெற வைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது என்பதும் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழகம் பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு,

ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே காரில் 25 பேர் பயணம் செய்து உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழலின் கதை: காஜல் அகர்வாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, ஹிந்,தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஹிட் மலையாள படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கடந்த ஜனவரி 15ஆம் தேதி மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன். ஜியோ பேபி என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் நிமிஷா சுரேஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர்.

நகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.