நடிகை ராதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Radhika

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
கடந்த 1978ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நடிகையாக அறிமுகமான ராதிகா, அதன் பின்னர் சுமார் 40 வருடங்களாக தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாயகி முதல் குணசித்திர வேடங்கள் வரை சுமார் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்றும் அவர் சினிமா, தொலைக்காட்சி, தயாரிப்பாளர் என பிசியாக இருப்பவர்.
இந்த நிலையில் இன்றைய பிறந்த நாளில் அவர் நடித்த முக்கிய திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்

கிழக்கே போகும் ரயில்:

Radhika

ராதிகாவின் முதல் படமான இந்த படத்தை பாரதிராஜா இயக்கியவதால் அவர் ஒரு புதுமுகம் என்று தெரியாத அளவில் அவரது நடிப்பு வெளிப்பட்டது. லண்டனில் படித்து வளர்ந்த ராதிகாவை ஒரு கிராமத்து பெண்ணாக மாற்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க செய்ததில் பாரதிராஜாவின் பங்கே மிக அதிகம்

இன்று போய் நாளை வா:

Radhika

ராதிகா நடித்த முதல் முழுநீள நகைச்சுவை படம். கே.பாக்யராஜ் உள்பட மூன்று பேர் தன்னை விரட்டி விரட்டி காதலிப்பது தெரிந்ததும் அவர்களிடம் இருந்து தப்பிக்கவும், அவர்களை ஒருவரை தேர்வு செய்யவ அவர் செய்யும் தந்திரங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்

நல்லவனுக்கு நல்லவன்:

Radhika

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ராதிகா இந்த படத்தில் ஒரு ரெளடியை திருத்தும் பெண்ணாகவும், பின்னர் கணவருக்கு நல்ல மனைவியாகவும், மகளுக்கு நல்ல தாயாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்

சிப்பிக்குள் முத்து:

Radhika

உலக நாயகன் கமல்ஹாசனுடன் இந்த படத்தில் இணைந்து நடித்த ராதிகா, குழந்தைத்தனமான கேரக்டரை கொண்ட கமல்ஹாசனுக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்தும் கேரக்டரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்

கேளடி கண்மணி:

Radhika

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ராதிகா நடித்த இந்த படம் வயதானவர்களின் காதலை மிக மென்மையாக வெளிப்படுத்திய படம். ராதிகாவும் பாலசுப்பிரமணியமும் இந்த படத்தில் போட்டி போட்டு நடித்திருந்தார்கள்

கிழக்கு சீமையிலே:

Radhika

அண்ணன் தங்கை பாசத்தை 'பாசமலர்' படத்திற்கு பின்னர் மிக இயல்பாக வெளிப்படுத்திய இந்த படத்தில் விஜயகுமாரும், ராதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்தார்கள் என்று கூறுவதைவிட வாழ்ந்தார்கள் என்றே கூறலாம்

ஜீன்ஸ்:

Radhika"

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் வாயாடி கேரக்டரில் நடித்திருந்த ராதிகா, இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாசருக்கு அவர் செய்த தவறு புரியும் வகையில் தன்னுடைய பாணியில் பேசும் வசனங்கள் பிரபலம். ராதிகாவின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அபாரமான படங்களில் இதுவும் ஒன்று.

நானும் ரெளடிதான்:

Radhika

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக இந்த படத்தில் நடித்த ராதிகா, அப்பாவி போலீஸ் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். மகன் தவறு செய்வது தெரிந்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் மகனுக்கு சப்போர்ட் செய்யும் ஒரு சராசரி அம்மா கேரக்டரில் ராதிகா மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

தெறி:

Radhika

தளபதி விஜய்க்கு அம்மாவாக இந்த படத்தில் ராதிகா நடித்திருப்பார். ராதிகா, விஜய் ஆகிய இருவருமே உண்மையான அம்மா, மகன் என்று கூறும் அளவுக்கு இருவரும் மிக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மகனின் கொஞ்சல், அம்மாவின் செல்ல கண்டிப்பு ஆகிய ரசிகர்கள் கண்டு களித்திராத காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்

Radhika

ராதிகா திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ராதிகாவின் ஆதிக்கம் இன்றும் இருந்து வருகிறது. அவரது 'சித்தி', 'அரசி', 'செல்லமே' மற்றும் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'வாணி ராணி' ஆகிய சீரியல்கள் தமிழக பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அவரது நடிப்பு சேவை மென்மேலும் தொடர்ந்து இன்னும் பல விருதுகளை வென்று குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் நமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்