மூளையில்லாத வேலையற்றவர்கள்: ராதிகா சரத்குமாரின் ஆவேச பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரால் போலி கணக்குகள் உருவாக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய நபர்களை மூளை இல்லாத வேலையற்றவர்கள் என நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டரில் கடுமையாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கணக்கு குறித்து தகவல் வந்ததும் உடனடியாக நடிகை சுஹாசினி மணிரத்னம் அது போலி கணக்கு என்றும் அந்தக் கணக்கை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மணிரத்தினம் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு உருவாக்கிய நபருக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சற்று கோபமாக இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
சில சமயங்களில் நாம் இந்த உலகத்தை மீட்பவர்கள் என நினைக்கும் மூளையில்லாத மற்றும் வேலையற்றவர்கள் இருப்பதை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இணையத்தில் நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் கொண்டிருக்கலாம், முட்டாள்தனமாக ஒருசிலர் வேலை செய்வதை நான் காண்கிறேன். இனி என் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
Sometimes we should be aware that some brainless and jobless twit, who thinks they are the saviours of this world are present. On the Internet u can be anything u want, I see a lot choose stupid??????Dont want to waste my time or energy anymore ??
— Radikaa Sarathkumar (@realradikaa) June 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com