சிம்புவுக்கு ராதிகா கூறிய அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவடைந்ததில் இருந்து புதிய நிர்வாகிகளிடம் நடிகர் சிம்பு கருத்துவேறுபாடுகளுடனே இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் சங்கத்தில் இருந்து விலக இருப்பதாக அறிவித்து சிம்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சிம்புவுக்கு நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் சங்கம் என்பது ஒரு தனிப்பட்டவர்களின் சொத்து கிடையாது. அது நம்முடைய சங்கம். உங்களுடைய கஷ்ட காலங்களில் நடிகர் சங்கம் உதவாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைத்தையும் சந்தித்து வெற்று பெற்றுள்ளீர்கள். எனவே நடிகர் சங்கத்தில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யவும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிம்பு பீப் பாடல் பிரச்சனையில் சிக்கியபோது நடிகர் சங்கம் இந்த பிரச்சனையில் தலையிடவில்லை என்பதும் இந்த பிரச்சனையை சிம்பு தனியாகவே நீதிமன்ற நடவடிக்கைகளை சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This is not their property, it is our association.They did not support u, but u won.Reconsider do not giv in @iam_str
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com