சரத்குமார் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? ராதிகா விளக்கம்
- IndiaGlitz, [Thursday,June 23 2016]
பிரபல நடிகரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஃபுட் பாய்சன் காரணமாகவே சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.