சரத்குமார் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? ராதிகா விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,June 23 2016]

பிரபல நடிகரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஃபுட் பாய்சன் காரணமாகவே சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

More News

தனுஷின் 'வடசென்னை'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வடசென்னை' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

விஷ்ணு-சுசீந்திரன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

வெண்ணிலா கபடிக்குழு', அழகர்சாமியின் குதிரை', ஜீவா உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது.

இளையதளபதியின் அன்புக்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையா?

இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

42-ல் அடியெடுத்து வைக்கும் இளையதளபதியின் 42 குணாதிசயங்கள்

இளையதளபதி விஜய்க்கு இன்று 42வது பிறந்தநாள். இந்த நன்னாளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நாமும் நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறோம். விஜய்யை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கில் விஷயங்கள் உள்ளன.

விஜய் பிறந்த நாளை எங்கு கொண்டாடினார்? முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் இன்று 'விஜய் 60' படக்குழுவினர்களுடன் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார் என சற்று முன்னர் பார்த்தோம்.,