வெட்கி தலைகுனியுங்கள் நண்பர்களே. ராதிகா சரத்குமார்
- IndiaGlitz, [Tuesday,October 20 2015]
நடிகர் சங்க தேர்தலுக்கு பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், எஸ்பிஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறிய நிலையில், 'தவறான குற்றச்சாட்டுக்கள் கூறிய நண்பர்களே நீங்கள் தலைகுனியுங்கள்' என்று இன்று ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் இரண்டாக பிளவுபட முக்கிய காரணமாக அமைந்தது, நடிகர் சங்கம் எஸ்பிஐ சினிமாஸ் உடன் போட்ட ஒப்பந்தம்தான். இந்த ஒப்பந்தம் முறைகேடாக போடப்பட்டதாக விஷால் தரப்பினர் குற்றம் சாட்ட, அதற்கு சரத்குமார் தரப்பு மறுப்பு தெரிவிக்க அதன் விளைவாக உருவானதுதான் 'பாண்டவர் அணி
ஆனால் தேர்தலுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக நேற்று சரத்குமார் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 'தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே. சரத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்று ராதிகா இன்று சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய பிர்ச்சனைகள் தேர்தலோடு முடியட்டும், இனிமேல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் ராதிகாவின் இந்த பதிவு நடிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.