ரிஸ்க் எடுத்த வடிவேலுவை பார்த்து சிரித்த ராதிகா.. 'சந்திரமுகி 2' படப்பிடிப்பில் கலகலப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’சந்திரமுகி 2 ’படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் வடிவேலு தனது புகழ்பெற்ற வசனத்தை பேசி காட்டிய போது அதைக் கேட்டு நடிகை ராதிகா சிரித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் அதில் ராகவா லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் வடிவேலு ’ரிஸ்க் எடுப்பது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று தனது புகழ்பெற்ற வசனத்தை கூறி ரஸ்க் சாப்பிடும் காட்சி உள்ளது. வடிவேலுவின் இந்த வசனத்தை கேட்டு அருகில் உட்கார்ந்திருந்த நடிகை ராதிகா சிரிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் பெரும் படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout