பாரதிராஜா இவ்வளவு சொல்லியும் கேட்காத ராதிகா: என்ன செய்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல் நிலை படிப்படியாக தேறி வருகிறது என மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் ’தான் உடல் நலம் தேறி வருவதாகவும் தன்னை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தயவு செய்து யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் உடல் நலம் தேறிய உடன் நானே அனைவரையும் வந்து சந்திக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளில் ஒருவரான ராதிகா கடந்த சில நாட்களாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த நிலையில் தற்போது சென்னை திரும்பியதும் மருத்துவமனைக்கு சென்று பாரதிராஜாவை நேரில் சந்தித்து உள்ளார். இதனை அடுத்து அவரது உடல் நலம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிரார்த்தனைகளுக்கு சக்திகள் உண்டு என இன்று என் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்தபோது தெரிந்து கொண்டேன். அவரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபரை உடம்பு சரியில்லாமல் பார்க்க என்னால் முடியவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும், மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பாரதிராஜா தன்னை யாரும் பார்க்க வரவேண்டாம் என்று கூறியும் ராதிகா பாரதிராஜாவை நேரில் பார்த்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prayers have the power and good vibrations. Sooo happy to see my director today @offBharathiraja , on the road to recovery.Always a person I look upto, can’t bear to see him un well. Thanks to everyone for the prayers and #mgmhospital for the care. pic.twitter.com/ZtXqEBPSiT
— Radikaa Sarathkumar (@realradikaa) August 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments