சரத்குமாருக்கு ராதிகா கொடுத்த அன்பு முத்தம்.. என்ன விசேஷம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகை ராதிகா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ’நம்ம அண்ணாச்சி’ ’சூரியவம்சம்’ உள்பட ஒரு சில படங்களில் இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் தம்பதிகளாக இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தார் என்பதும் சமீபத்தில் அவர் வெளிநாட்டில் பட்ட படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ராதிகா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ’எங்கள் வாழ்வின் சிங்கமான சரத்குமாருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வைராக்கியம், விடாமுயற்சி, வலிமை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சி அடையட்டும்’ என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவருக்கு அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Happiest birthday to the Lion Heart of our lives @realsarathkumar may your zeal and perseverance for life grow from strength to strength 💪🏻💪🏻more strength, peace and happiness to you from the bottom of my heart❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/x3y5h4a4Qk
— Radikaa Sarathkumar (@realradikaa) July 14, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments