'அஜாக்ரதா'பான் இந்திய படத்தில் ராதிகா குமாரசாமியின் கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான ‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாரசாமியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது

பிரபல கன்னட நடிகையும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கர்நாடகாவில் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சசிதர் மிக பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்கேற்றபடி மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா. அவர் பின்னால் பல தீபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அவருடைய பிறந்தநாளுக்கு மட்டுமல்லாமல் தீபாவளிக்கும் சேர்த்து இது ஒரு பொருத்தமான போஸ்டர் தான் .

‘தி ஷேடோஸ் பிஹைன்ட் தி கர்மா’ என்பதுதான் இந்தப்படத்தின் டேக்லைன். பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்க உள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படும்.

ஆக்சன் த்ரில்லராக உருவாக உள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட் முக்கிய பங்காக இருக்கிறார். மேலும் சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

 

More News

எங்க அம்மா அப்பவே சொன்னாங்க.. மாயாவிடம் புலம்பும் பூர்ணிமா..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஐஷு எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது  எபிசோடு பார்த்த அனைவரும் தெரிந்ததே. 

சூர்யாவின் 'கங்குவா' தீபாவளி போஸ்டர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னை திரும்பிய தளபதி விஜய்.. தாய்லாந்து படப்பிடிப்பில் நடந்தது என்ன?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில ரொமான்ஸ்

பிக்பாஸ் வீட்டில் 2 பிரபலங்கள் திடீர் விசிட்.. வைல்ட்கார்ட் போட்டியாளர்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று திடீரென இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிக்சனை கேள்வியே கேட்கவில்லை... கமல் மீது ஏமாற்றம் அடைந்த எவிக்சன் ஆன போட்டியாளர்..!

நிக்சன் தன்னை மோசமான முறையில் விமர்சனம் செய்த நிலையில் அது குறித்து கமல்ஹாசன் வார இறுதியில் கேட்பார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்த எபிசோடு தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்ததாகவும்