அனுமதியின்றி யூடியூபில் வெளியான திரைப்படம்: முன்னாள் முதல்வரின் மனைவி புகார்!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

பிரபல இயக்குனர் ஜனநாதன் இயக்கிய ’இயற்கை’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா. குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்ட இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு தான் நடித்து தயாரித்த ’ஸ்வீட்டி நானா ஜோடி’ என்ற கன்னட திரைப்படத்தை தன்னுடைய அனுமதி இல்லாமல் யூடியூப்பில் வெளியிட்ட மர்ம நபர் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

ரூபாய் மூன்று கோடி செலவில் இந்த படத்தை தான் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்ததாகவும் ஆனால் தன்னுடைய அனுமதியின்றி மோசடியாக யூடிபில் மர்ம நபர் ஒருவர் வெளியிட்டுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்றும், விரைவில் இந்த படத்தை யூடியூப்பில் பதிவேற்றிய நபர் கண்டுபிடிக்கபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'குட்டி லவ் ஸ்டோரி'யில் இணையும் 4 முன்னணி இயக்குனர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இருப்பினும் ஓடிடி பிளாட்பாரம்

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிக்கு தடை: மத்திய அரசு மீண்டும் அதிரடி

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில்

மனைவியிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்த டாக்டர்!

மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நல்லவேளை டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டது: அதிர்ச்சி தகவல் 

சீனாவின் செயலியான டிக்டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த செயலியால் ஏராளமான இளம் பெண்கள் கலாச்சாரத்தை மதிக்காமல் தவறான பாதையில் செல்வதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.