நடிகை நயன்தாராவுக்கு ராதிகா வாழ்த்து: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் அசத்தலாக இருப்பதாக பார்வையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா கூறுகையில் ’நல்ல சினிமாவின் உணர்வை ஊக்குவிக்கும் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வினோத்ராஜ் என்பவர் இயக்கிய ’கூழாங்கல்’ படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர் என்பதும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wish you and Nayan all the best, in encouraging the spirit of good cinema. https://t.co/8fRgjf5fsM
— Radikaa Sarathkumar (@realradikaa) December 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com