உண்மையான பச்சோந்தியை மக்கள் பார்க்கிறார்கள்: விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து ராதிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். அவரை முன்மொழிந்த 10 பேர்களில் 2 பேர் தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தால் வேட்புமனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்துள்ளார். இதற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து திரையுலகினர்கள் சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கிண்டலடித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகை ராதிகா கூறியபோது, 'மக்களுக்காக உழைப்பேன், ஊழலை எதிர்ப்பேன் என்று கூறிய வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மையான பச்சோந்தியை மக்கள் இப்போது பார்க்கின்றார்கள். குறிப்பாக கையெழுத்தில் மோசடி என்பதற்காக. உண்மையான நிறத்தையும் அனைவரும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.
விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிடுகையில், 'நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தான் நடிகர் விஷால்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com