உண்மையான பச்சோந்தியை மக்கள் பார்க்கிறார்கள்: விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து ராதிகா

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். அவரை முன்மொழிந்த 10 பேர்களில் 2 பேர் தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தால் வேட்புமனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்துள்ளார். இதற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து திரையுலகினர்கள் சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கிண்டலடித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகை ராதிகா கூறியபோது, 'மக்களுக்காக உழைப்பேன், ஊழலை எதிர்ப்பேன் என்று கூறிய வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மையான பச்சோந்தியை மக்கள் இப்போது பார்க்கின்றார்கள். குறிப்பாக கையெழுத்தில் மோசடி என்பதற்காக. உண்மையான நிறத்தையும் அனைவரும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிடுகையில், 'நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தான் நடிகர் விஷால்' என்று கூறியுள்ளார்.

More News

ஆர்.கே.நகரில் விஷால் தர்ணா போராட்டம்:

ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷாலும் அவருடைய ஆதரவாளர்களும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் அலுவலகம் விரைந்தார் விஷால்

ஆர்.கே.நகரில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் திமுக இணைந்து தேர்தல் அதிகாரியை வலியுறுத்தியதை சற்றுமுன் பார்த்தோம்.

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம்: தமிழக அரசின் புதிய அரசாணை

தமிழக திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு டிக்கெட்டின் அளவிற்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.. குறிப்பாக ஒருசில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மணிகணக்கில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்த நிலை

'தளபதி 62' படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

விஷாலுக்கு வாழ்த்து கூறி வம்பில் மாட்டிக்கொண்ட குஷ்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேட்சைகளும் இந்த முறை அதிகளவில் போட்டியிடுகின்றனர்.