மநீம-த்திற்கு பிரச்சாரம் செய்த ராதிகா...சித்தி என அழைத்த சிறுவர்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக வாக்குகள் திரட்டிய ராதிகாவை, சித்தி என்று சிறுவர்கள் அன்போடு அழைத்துள்ளனர். தற்போது இந்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கமலின் மக்கள் நீதி மய்யத்துடன், சரத்தின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. சரத்குமார் மற்றும் ராதிகா இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், மநீம, ஐஜேகே மற்றும் சமக சார்பாக பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிரமுகர்களின் பிரச்சாரம் வித்தியாசமான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மநீம-சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்கும் நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராதிகா. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பேசிய ராதிகா, திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டுப்போட்டு நீங்கள் பயனடையவில்லை. அவர்களை நம்பி ஏமாந்தது போதும். உங்களை நம்பி புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இம்முறை யோசித்து பார்த்து, நல்ல மாற்றத்திற்காக எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள். மக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஆதரவு தந்தால், நல்ல அரசியலை உங்களுக்கு முன்னிறுத்தி காண்பிப்போம்.
தேர்தல் நேரத்தில் திராவிடக்கட்சிகள் மாறிமாறி இலவசங்களை அறிவிக்கின்றனர். தமிழகமே தத்தளித்து கொண்டும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் இலவச வாஷிங்மிஷின் எதற்கு..? 100 நாட்களில் குறைகளை தீர்த்து வைப்போம் என இஷ்டத்திற்கு இலவசங்களை அறிவித்துள்ளார்கள்.
மீனைப்பிடித்து கையில் கொடுக்கிறார்கள்..? இதில் என்ன சிறப்பு. அதை எப்படி தூண்டில் போட்டு தூக்க வேண்டும் என்பதிலே சிறப்பு இருக்கிறது. அதை நாங்கள் கற்றுத்தருவோம். எங்களுக்கு ஆதரவு தந்து வாக்களித்தீர்கள் என்றால் ''இருட்டில் உள்ள தமிழகம் ஒளிரச்செய்யும்'' என்றும் என அவர் வாக்குறுதி அளித்தார்.
இதனிடையே அங்கிருந்த சிறுவர்கள், ராதிகாவை சித்தி என அன்போடு அழைத்தார்கள். அவர்களை பார்த்து சிரித்து பதிலளித்த அவர் 'நல்லா படிங்க, அவசியம் மாஸ்க் போடுங்க' என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கிருந்த பெண்களை பார்த்து உங்கள் வீட்டில் என்ன குழம்பு..? என சிரித்தபடி பேசி வாக்குகளை திரட்டினார் ராதிகா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout