விமானத்தில் தூங்கியபோது ரசிகரின் செயலால் அதிர்ச்சி அடைந்த ராதிகா ஆப்தே
Send us your feedback to audioarticles@vaarta.com
லண்டனில் தான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவரின் செயலால்தான் அதிர்ச்சி அடைந்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ படத்தின் நாயகி ராதிகா ஆப்தே கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும், ஹாலிவுட்டில் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பம் லண்டனில் இருப்பதால் படப்பிடிப்புக்கு அவ்வப்போது இந்தியா வந்து விட்டு அதன் பின்னர் மீண்டும் லண்டன் சென்று விடுவார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக அவர் லண்டனில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லண்டனில் ஒரு முறை விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு ரசிகர் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் தற்போது சோர்வாக இருப்பதால் இப்போது முடியாது என்று மறுத்து விட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் விமானத்தில் தான் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த ரசிகர் தனது அருகே வந்து செல்பி எடுக்க முயன்றதாகவும் திடீரென தான் கண் விழித்து பார்த்த போது அந்த நபர் போனை எனை நோக்கி திருப்பி செல்பி எடுக்க முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் இது போன்ற கண்ணியமற்ற செயலால் தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் லண்டனில் தற்போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்றும் தான் ஜாக்கிங் செல்லும் போதும் உடற்பயிற்சி செய்யும்போதும் தன்னுடைய பெயரை அழைத்து தனது நடிப்பு நன்றாக இருக்கிறது என்று கூறுவதாகவும் தெரிவித்தார். ஒருவகையில் இது மகிழ்ச்சியாக இருந்தாலும் தான் வாக்கிங் செல்லும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் ரசிகர்களின் செயல் இருப்பதால், தான் கவலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தாலும் தற்போது பொதுமக்கள் வெப்சீரிஸ் பார்க்க தொடங்கி விட்டார்கள் என்றும் வருங்காலத்தில் வெப்சீரீஸ் ஆக்கிரமிப்பு தான் அதிகம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com