'கலாச்சாரம் சீரழிந்து விட்டது.. ராதிகா ஆப்தேவின் கர்ப்பகால போட்டோக்களுக்கு கண்டனம்..!
- IndiaGlitz, [Sunday,December 22 2024]
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று கருத்துகள் பதிவாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ உள்பட சில தமிழ் படங்களிலும், இந்தி, ஆங்கில படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே, 2012ஆம் ஆண்டு பெனடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருந்தபோது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த புகைப்படங்களை எடுத்தேன். நான் எவ்வளவு எடை போட்டு இருந்தேன் என்பதை பார்த்ததில்லை. எனக்கு கர்ப்ப காலம் என்பது மிகவும் சோதனையான காலம். எனது கை, கால்கள் வீங்கி இருந்தன; இடுப்பில் வலி இருந்தது. ஆனால், இந்த புகைப்படங்களை நான் மிகுந்த கனிவுடன் பார்க்கிறேன். இந்த மாற்றங்களில் நான் அழகை மட்டுமே காண்கிறேன். இந்த புகைப்படங்களை நான் எப்போதும் போற்றுவேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கர்ப்பகால புகைப்படங்கள் தொடர்பாக சில ரசிகர்கள், கர்ப்பகால போட்டோஷூட் என்ற பெயரில் ஆபாசமான புகைப்படங்கள் எடுக்கும் கலாச்சாரம் ஆரம்பித்துவிட்டது. கலாச்சாரம் சீரழிந்து விட்டது, என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.