அரை நிர்வாணக் காட்சியில் ராதிகா அப்தே?
- IndiaGlitz, [Monday,July 13 2015]
தமிழில் சில படங்களில் நடித்து நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடிகொண்டிருக்கும் ராதிகா அப்தே அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கினார். வெளிநாடுப் படம் ஒன்றில் அவர் நிர்வாணமாக நடித்ததுள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையைக் கிளப்பியது, சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஆபாசக் காணொளியில் தோன்றுவது அவர்தான் என்று சொல்லப்பட்டு அதுவும் சர்ச்சையானது. அடுத்ததாக தெலுங்கு திரையுலகினர் பெண்களை மதிப்பதில்லை என்ற அவரது கருத்தும் மிகுந்த சர்ச்சையையும் எதிர்ப்புகளையும் சந்தித்தது.
இந்நிலையில் ராதிகா அப்தே நடித்த மஞ்சி த மவுண்டன் மேன்'' என்ற இந்திப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் இவர் அரை நிர்வாணமாகத் தோன்றுவதுபோல் ஒரு காட்சி உள்ளது. இதுவும் ஒரு சர்ச்சையைக் கிளப்பலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1950களில் வாழ்ந்த தாசரத் மஞ்சியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறது. கேத்தன் மேத்தா என்பவர் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
மஞ்சியாக நவாசுதீன் சித்திக் அவரது மனைவியாக ராதிகா அப்தே நடித்துள்ளனர். ட்ரைலரிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே பல நெருக்கமான காதல் காட்சிகள் இருக்கின்றன. அவற்றில் அப்தே படு கவர்ச்சியாகத் தோன்றுகிறார்.
ஆனால் இது ஒரு உணர்ச்சிகரமான படம் என்பது முழு ட்ரைலரையும் பார்த்தால் புரியும்.
இரு கிராமங்களுக்கு இடையே ஒரு மலை இருக்கிறது. கரடு முரடான அந்த மலையைக் கடக்கும்போது மஞ்சியின் மனைவி கால் இடறிக் கீழே விழுந்து இறந்ததுவிடுகிறார், அனாதையாகும் மஞ்சி தன் நிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒற்றையாளாக 22 வருடங்கள் உழைத்து அந்த மலையை உடைத்து இரு கிராமங்களுக்கு இடையில் பாதை அமைக்கிறார். தாசரத் மஞ்சியின் இந்த உண்மைக் கதைதான் திரைப்படமாகியிருக்கிறது.