நிர்வாண காட்சிகள் லீக் ஆனது ஒருவகையில் நல்லதே. ராதிகா ஆப்தே

  • IndiaGlitz, [Friday,August 26 2016]

கடந்த வாரம் திரையுலகில் பரபரப்பாக வலம் வந்த செய்திகளில் ஒன்று 'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே 'Parched' என்ற படத்தில் நிர்வாணமாக நடித்ததாக வெளிவந்த செய்திதான். இதுகுறித்து ராதிகா ஆப்தே தற்போது ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு படம் ஒன்றுக்காக இதே போன்று நிர்வாணமாக நடித்த காட்சி லீக் ஆனபோது ரொம்பவும் அப்செட் ஆனேன். ஆனால் தற்போது லீக் ஆன நிர்வாண காட்சி குறித்த தகவல் வந்ததும் எனக்கு எவ்விதமான ஆத்திரமும் ஏற்படவில்லை. இம்முறை எனக்கு பக்குவம் ஏற்பட்டுவிட்டதால் இதுவும் ஒருவகையில் நல்லதே என்று எண்ண தோன்றுகிறது.
நான் நடித்துள்ள நிர்வாண காட்சிகளை படத்தின் கதையோடு இணைத்து கலைக்கண்ணோடு பார்த்தால் அருவருப்பு இருக்காது. ஒருசில நடிகைகள் கவர்ச்சியாக ஆடை அணிந்து, அருவருப்பான அசைவுகள் கொடுப்பதை காட்டிலும் டீசண்ட்டான நிர்வாணம் மேல் என்றுதான் நான் நினைக்கின்றேன். மேலும் எனது அந்த காட்சி குறித்து விமர்சனம் செய்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். Parched படம் ரிலீஸ் ஆன பின்னர் நான் நடித்துள்ள நிர்வாண காட்சி எந்த அளவுக்கு படத்தின் கதையோடு ஒன்றியுள்ளது என்று பார்த்த பின்னர் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான். என்று கூறியுள்ளார். 'கபாலி' நடிகையின் பக்குவப்பட்ட இந்த பேட்டி நிச்சயம் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.