close
Choose your channels

என்ன ஒரு அற்புதமான திரைப்படம்: ராதிகா சரத்குமார் பாராட்டு

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்த்து விட்டு ’என்ன ஒரு அற்புதமான படம்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளியன்று வெளியான மோகன்லாலின் ’த்ரிஷ்யம் 2’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை விட பல மடங்கு த்ரில், சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்றும் குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் சான்ஸே இல்லை, வேற லெவலில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ள நிலையில் முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அதே போல் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது ராதிகாவும் இந்த படத்தை பார்த்து, இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் ’த்ரிஷ்யம் 2 திரைப்படம் சூப்பர் திரைப்படம் என்றும், மோகன்லால் நம்முடைய இதயத்தை கவர்ந்து விட்டார் என்றும், இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும், என்ன ஒரு அபாரமான இரண்டாம் பாகம் திரைப்படம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment