என்ன ஒரு அற்புதமான திரைப்படம்: ராதிகா சரத்குமார் பாராட்டு

நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்த்து விட்டு ’என்ன ஒரு அற்புதமான படம்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளியன்று வெளியான மோகன்லாலின் ’த்ரிஷ்யம் 2’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை விட பல மடங்கு த்ரில், சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்றும் குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் சான்ஸே இல்லை, வேற லெவலில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ள நிலையில் முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அதே போல் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது ராதிகாவும் இந்த படத்தை பார்த்து, இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் ’த்ரிஷ்யம் 2 திரைப்படம் சூப்பர் திரைப்படம் என்றும், மோகன்லால் நம்முடைய இதயத்தை கவர்ந்து விட்டார் என்றும், இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும், என்ன ஒரு அபாரமான இரண்டாம் பாகம் திரைப்படம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

More News

'குக் வித் கோமாளி' ஷிவாங்கி பெற்றோர்களை கெளரவித்த தமிழக அரசு!

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சியை பெற்றுள்ளவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் ஆரியின் அடுத்தகட்ட நகர்வு: முக்கிய அறிவிப்பு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரி இன்று தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்பதும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் மால் ஒன்றில் அவர் ரசிகர்களிடம் சந்திக்கும் நிகழ்வுக்கு

என் தாய்க்கு சமர்ப்பணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

தமிழக அரசு நேற்று கலைமாமணி விருது குறித்த பட்டியலை வெளியிட்டது என்பதும் அந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இருந்தது என்பதையும் பார்த்தோம்

மாகாபாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

விஜய் டிவி ஆங்கரான மாகாபா ஆனந்த் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

ஷிவானியை நிம்மதியா இருக்க விடுங்கள்: மனைவியை விவாகரத்து செய்த அஸீம் பதிவு!

https://tamil.behindtalkies.com/vijay-tv-serial-actor-azeem-opens-about-relationship-with-shivani/