சீரியலுக்கு வரும் விஜய் தந்தை.. ராதிகா தான் ஜோடியா? டைட்டில் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி தொடரை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பதோடு அவர் முக்கிய இடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’நீதிக்கு தண்டனை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ராதிகா. அதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளில் பல வாணி ராணி, சித்தி உள்பட பல தொடர்களை தயாரித்து நடித்து உள்ளார் என்பதும் அவை மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராதிகாவின் ராடான் நிறுவனம் தொலைக்காட்சி தொடர் ஒன்றை மீண்டும் தயாரிக்க இருக்கிறது. இதுவரை ராதிகாவின் தொடர்கள் சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த தொடருக்கு ’கிழக்கு வாசல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் ’பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்த ரேஷ்மா, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரில் நடித்த அஸ்வினி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் ராதிகாவும் இந்த தொடரில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடரில் எஸ்.ஏ.சிக்கு ஜோடியாக ராதிகா நடிக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com