பிரெஞ்ச் மொழி திரைப்படத்தில் ராதிகா.. முதல் நாள் படப்பிடிப்பின் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,October 24 2023]

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகை ராதிகா தற்போது முதல் முறையாக பிரெஞ்சு மொழி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியதோடு அது குறித்த புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்பட பல இந்திய மொழிகளில் அவர் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் முதல் முறையாக பிரெஞ்சு மொழி திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் முதல் நாள் முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அவர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரெஞ்ச் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்த கணவர் சரத்குமார் மற்றும் மகன் மிதுன் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.