'ராதே ஷ்யாம்' படத்தின் தமிழ் பின்னணி இசையமைப்பாளர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே.இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்களுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பின்னணி இசை அமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது.
’ராதே ஷ்யாம்’ படத்தின் தமிழ் பதிப்பின் பின்னணி இசை அமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திற்குமே தமன் பின்னணி இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are pleased to welcome the young music maestro @MusicThaman to score the BGM of #RadheShyam for South Languages!#Prabhas @hegdepooja @director_radhaa @justin_tunes @UV_Creations @TSeries @GopiKrishnaMvs pic.twitter.com/S2T1r568IE
— UV Creations (@UV_Creations) December 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com