சர்ச்சைக்குரிய பெண் சாமியாருக்கு இருக்கையை கொடுத்த போலீஸ் அதிகாரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சாமியார் என்றாலே சர்ச்சைகளுக்கு இடமிருக்காது. அதிலும் பெண் சாமியார் என்றால் கேட்கவே வேண்டாம். கடந்த சில மாதங்களாகவே மும்பையை சேர்ந்த பெண் சாமியார் ராதே மா குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த வாரம் தசரா கொண்டாட்டம் நடந்தபோது டெல்லி காவல்நிலையம் ஒன்றுக்கு பெண் சாமியார் ராதே மா வந்தபோது அவருக்கு தனது இருக்கையை காவல்நிலையத்தின் அதிகாரி தந்ததாகவும், அவரது அருகில் அந்த அதிகாரி பவ்யமாக நிற்பது போன்றும் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு உள்பட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒரு சாமியாருக்கு காவல்துறை அதிகாரி ஒருவரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றது மட்டுமின்றி தனது இருக்கையையும் கொடுத்த விவகாரம் உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout