மீடு விவகாரம்: ராதாரவியின் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் மீடூ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, மீடூவில் குற்றம் சுமத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீடூவில் மற்றவர்களை குற்றஞ்சொல்வதாக நினைத்து கொண்டு நீங்களே அதில் மாட்டிக்கொள்கிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நம்மளை நாமே செருப்பால் அடித்து கொள்வது போன்றது இந்த மீடூ
ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆனா கூத்தாடி ரெண்டுபட்டா, அது ஊருக்கே கொண்டாட்டமாகிவிடும். இந்த டுவிட்டர், ஃபேஸ்புக், செல்போன் இதெல்லாம இல்லாமல் இருந்ததால்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்.
இந்த மீடுவெல்லாம் போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்துவிட்டு போக முடியுமே தவிர, சட்டப்படி இதனால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே மீடூ பிரச்சனைகளை விட்டுவிட்டு செத்து கொண்டிருக்கும் சினிமாவை வாழ வைக்க என்ன செய்ய முடியுமோ, அதை போய் பாருங்கள்
இவ்வாறு ராதாரவி பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout