'மருது' படத்தில் இணைந்த இரு துருவங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்காக விஷால் மற்றும் ராதாரவி ஆகியோர் இரு துருவங்களாக செயல்பட்டதையும், தேர்தலின்போது ஒருவரையொருவர் தாக்கி பேசியதையும் பார்த்த போது இனிமேல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால் அனைவரின் கணிப்பையும் தகர்த்து, தேர்தல் பகையை மறந்து மீண்டும் விஷாலுடன் ராதாரவி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொம்பன்' பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ராதாரவியும் நடிக்கவுள்ளதாக தற்போது வெளிவந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
தேர்தல் தினத்தன்று நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்றும், தேர்தலுக்கு பின்னர் இரு அணி என்பதே இருக்காது என்றும், ஒரே அணியாக செயல்படுவோம் என்றும் பல நடிகர்கள் தெரிவித்த கருத்து தற்போது உண்மையாகியுள்ளது. தேர்தலின்போது வாக்குகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டாலும் தொழில் அடிப்படையும் இருவருமே நாகரீகமான நடிகர்கள் என்ற முறையில் நடந்து கொள்வது பாராடத்தக்க ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com