இந்த 'சர்கார்' அந்த சர்காரை சரிசெய்ய வேண்டும்: ராதாரவி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ராதாரவி பேசியதாவது:
`இது இசை வெளியீட்டு விழா அல்ல, சிறிய மாநாடு. இப்போது சர்க்கார் சுமாராக நடந்துகொண்டிருப்பதால் தான் இந்த சர்கார் வருகிறது. இந்த சர்கார் வந்து அதைச் சரி செய்ய வேண்டும். விஜய்யின் முதல் படத்தில் நான் அவருக்கு அப்பாவாக நடித்தேன். ஆனால் அவரது பெரிய ஸ்டார் ஆன பிறகு என்னிடம் இருந்து, தான் நடிப்பைக் கற்றுக்கொண்டதாக பெருமையாகக் கூறினார்.
இப்படி யாரும் சொல்லமாட்டாங்க. ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்துப் பெருமைப்படுறேன். யாருக்கும் தெரியாம நிறைய உதவிகளை விஜய் சைலன்டா செஞ்சிட்டு வர்றார். விஜய் சமுதாயத்துக்குத் தேவை. இதை நான் எந்த உள்நோக்கத்துடன் சொல்லவில்லை. சமுதாயத்துக்குத் தேவை என நான் சொன்னதுக்கே இவ்வளவு கைதட்டல்னா, நீ இறங்கினால் எவ்வளவு கைதட்டல் வரும். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும்.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout