அமிதாப்பச்சன் மகன் உட்கார்ந்து பார்க்கும் கபடி: ராதாரவி கலகல பேச்சு
- IndiaGlitz, [Friday,January 25 2019]
ரெளடிகள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக ஒருகாலத்தில் கருதப்பட்ட கபடி விளையாட்டு இன்று அமிதாப்பச்சன் மகன் உட்கார்ந்து பார்க்கும் நிலையில் உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அரசு இயக்கிய 'கபடி வீரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, 'ஒரு காலத்தில் கபடி விளையாட்டு என்றாலே ரெளடிகள் விளையாடும் விளையாட்டு என்று கூறுவார்கள். ஆனால் இன்று கபடி விளையாட்டை அமிதாப்பச்சன் மகனே உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. நானே டிவியில் கபடி போட்டிகளை பார்த்து ரசித்து வருகிறேன்.
அந்த வகையில் கபடி விளையாட்டு புகழ் பெற்று வரும் இந்த சரியான நேரத்தில் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். அரசு மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு பெரிய நடிகருக்கு பாடிகார்டாக இருந்தவர். குறிப்பாக அம்மா, அப்பாவை மதிக்க தெரிந்தவர். அவருடைய நல்ல எண்ணத்திற்கே இந்த படம் வெற்றி அடையும், அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்க என பல பொறுப்புகளை அரசு ஏற்றுள்ள இந்த படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.