நயன்தாரா என்ன திமுக கொள்கை பரப்பு செயலாளரா? ராதாரவி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு நடிகர் ராதாரவி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதாரவி தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் செய்த பிரச்சாரம் ஒன்றில் நயன்தாரா குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா குறித்து நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக என் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் நான் நயன்தாரா குறித்து தவறாக எதுவுமே. ஆனால் பெண்களை இழிவு படுத்துவதாக கூறி என்னை திமுக சஸ்பெண்ட் செய்தது. இதனை அடுத்து நானே அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தேன். நான் கேட்கிறேன் நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? அவரை பற்றி பேசியிருந்தாலும் என் மீது திமுக ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். ராதாரவியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#RadhaRavi the star campaigner of B.J.P hasn't learned his lesson nor would never learn I suppose... He yet again shames #Nayanthara in a stage!!
— Visvesh ✨ (@PawPawVee) March 31, 2021
I wonder how can he get away with such disgusting, disgraceful, ill talks on one of South India's biggest actors...!! https://t.co/cwFsEFPuub pic.twitter.com/7hia5FfVDU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com