நயன்தாரா என்ன திமுக கொள்கை பரப்பு செயலாளரா? ராதாரவி கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,March 31 2021]

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு நடிகர் ராதாரவி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதாரவி தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் செய்த பிரச்சாரம் ஒன்றில் நயன்தாரா குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா குறித்து நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக என் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் நான் நயன்தாரா குறித்து தவறாக எதுவுமே. ஆனால் பெண்களை இழிவு படுத்துவதாக கூறி என்னை திமுக சஸ்பெண்ட் செய்தது. இதனை அடுத்து நானே அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தேன். நான் கேட்கிறேன் நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? அவரை பற்றி பேசியிருந்தாலும் என் மீது திமுக ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். ராதாரவியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

திமுகவின் பி-டீமா டிடிவி தினகரன்… தொடரும் சர்ச்சை விளம்பரங்கள்!

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பின்பற்றி அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் டிடிவி தினகரன்.

சொந்த அண்ணனையே ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின்… திருச்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் காட்டம்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

'குக் வித் கோமாளி' நடுவர் செஃப் தாமுவின் மகளா இவர்? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'களும் சரி,

லிப் சர்வீஸ் தான்..இவ்வளவு நாள் செஞ்சிங்காளா...! கமலை பார்த்து வானதி நறுக் கேள்வி...!

கமல்ஹாசனை பார்த்து, இத்தனை நாட்கள் உதட்டுக்கு மட்டுமே சேவை செஞ்ச நீங்க, என்னை பார்த்து துக்கடா அரசியல் வாதி என்று சொல்லலாமா..? என்று கேள்விக்கனைகளை தொடுத்துள்ளார் வானதி சீனிவாசன். 

ஒரே ஒரு வாக்குறுதி, இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் குஷ்பு!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு இஸ்லாமிய பெண்களை ஒரே ஒரு வாக்குறுதி மூலம் கவர்ந்து விட்டதாகவும் அதனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின்