முதல்வராகும் தகுதி ரஜினிக்கு உண்டு: அதிமுகவில் இணைந்த நடிகர் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் பேசியபோது நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். அதனால் அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் ராதாரவி, அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி, ‘முதல்வராகும் தகுதி ரஜினிக்கு உண்டு என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஜெயிப்பார் என்றும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து கொண்டு, ‘ரஜினிக்கு முதல்வராகும் தகுதி உண்டு’ என ராதாரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

திருமணம் குறித்து லாஸ்லியா தெரிவித்த முக்கிய தகவல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. இருப்பினும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் ஆதரவு

வெற்றிமாறன் சார்பில் நான் வருத்தம் தெரிவிக்கின்றேன்: பாரதிராஜா

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வழக்கம்போல் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பிரபல இசையமைப்பாளரின் மகனை பாடகராக்கும் டி.இமான்!

குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களின் இசையமைப்பாளர் டி.இமான் என்று கூறும்  அளவிற்கு டி.இமான் சமீபகாலமாக குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார்.

மத்திய அரசிடம் பாரதிராஜா விடுத்த வேண்டுகோள்!

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் கண்டித்து வருகின்றனர்.

'ஓ பேபி' இயக்குனரின் அடுத்த படத்தில் அமலாபால்!

சமீபத்தில் வெளிவந்த சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. 70 வயது கிழவியான லட்சுமி, 20 வயது சமந்தாவாக