விஜய்யின் எளிமைக்கு எடுத்துக்காட்டு கூறிய ராதாரவி

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வருபவர் பழம்பெரும் நடிகர் ராதாரவி. ஏற்கனவே விஜய்யுடன் நான்கு படங்களில் நடித்துள்ள ராதாரவி, இந்த படத்தில் அவருடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு எளிமையான மனிதர். உடன் நடிக்கும் நடிகர்களை ஊக்குவிப்பதை அவர் தவறுவதில்லை. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் செட்டிற்கு வந்தால் முதலில் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்படி இயக்குனர்களை நிர்ப்பந்திப்பார்கள். ஆனால் விஜய் அப்படி செய்யாமல் தனக்கான காட்சி வரும்வரை பொறுமையாக காத்திருப்பார். அதற்காக அவர் கேரவனுக்குள் சென்றுவிட மாட்டார். படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு இடத்தில் அமர்ந்து படப்பிடிப்பை உன்னிப்பாக கவனிப்பார். எந்த ஒரு பெரிய ஸ்டாரும் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை' என்று கூறினார்.

'தளபதி 62' படத்தில் ராதாரவி ஒரு அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.