யாருக்கு என்ன உறவுன்னு தெரியாம பேசக்கூடாது: நயன்தாரா சர்ச்சை குறித்து ராதாரவி

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

நடிகர் ராதாரவி கடந்த சில வாரங்களுக்க்கு முன் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் விழா ஒன்றில், நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து இன்று அவர் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி கூறியதாவது:

'கொலையுதிர் காலம்' படவிழாவில் நான் நயன்தாரா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் மறுநாள் காலையில் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. 'யார் யாருக்கு என்னென்ன உறவுன்னு தெரியாம பேசக்கூடாது' என்ற பாடத்தை நான் கற்று கொண்டேன். நான் பேசியது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் நான் கூறியிருந்தேன். இவ்வளவு பெருந்தன்மையாக நான் நடந்து கொண்டும் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் திமுக தலையிட்டதால்தான் இனிமேலும் அமைதியாக இருக்கக்கூடாது என்று அதிமுகவில் இணைந்தேன். நான் அதிமுகவில் இணைவது குறித்த முடிவை இரண்டு நாட்களுக்கு முன்புதான் எடுத்தேன்.

கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்ததே எங்கள் அப்பா எம்.ஆர்.ராதா தான். ஆனால் அவருடைய மகனை கட்சியில் எந்தவித விளக்கத்தையும் கேட்காமல், ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் நீக்கியுள்ளனர்.

இவ்வாறு ராதாரவி தனது பேட்டியில் கூறினார்.
 

More News

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குணசித்திர நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'ஹவுஸ் ஓனர்'.

டிக்டாக்கில் விஷம் குடித்த வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை!

டிக்டாக் செயலியில் விஷம் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட அரியலூர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் பரிதாபமாக பலியானார்

நடிகர் சங்க தேர்தல்: விஜய்சேதுபதி ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷால் அணி, பாக்யராஜ் அணி ஆகிய இரு அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடிகர்,

ஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது!

இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் இண்டர்நெட். இந்த இண்டர்நெட் மூலம் பள்ளி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் மூலம் பெரும்பயன் பெற்று வருகின்றனர்.

இதுக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்? கருணாஸை கலாய்த்த சாந்தனு!

நாடக கலைஞர்களிடம் ஓட்டு கேட்க செல்லும்போது காசு கொடுப்பது குறித்து நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் கூறிய ஒரு கருத்து குறித்து பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில்