ஆங்கில படத்திற்கு நிகராக படம் எடுத்தால் மட்டும் போதாது: 'இந்தியன் 2'விபத்து குறித்து ராதாரவி

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தமிழ் படங்கள் எடுத்தால் மட்டும் போதாது ஆங்கில படத்தின் படப்பிடிப்பின்போது இருக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்

சமீபத்தில் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதில் ஒருவர் சந்திரன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வந்த நடிகர் ராதாரவி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’சந்திரன் அவர்கள் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். அவர் இறந்துவிட்டார் என்பதற்காக சொல்லவில்லை அவர் இருந்தாலும் இதையேதான் சொல்லி இருப்பேன். சந்திரன் கரடுமுரடாக பேசக்கூடியவர் என்றாலும் பலாப்பழம் போன்று உள்ளே இனிப்பான குணத்தை உடையவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்

ஆங்கிலப் படத்திற்கு இணையாக தமிழ் படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. ஆங்கில படங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும். ஹாலிவுட்டில் படம் எடுப்பவர்கள் படக்குழுவினர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது போது நம் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் நண்பர் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் ரூபாய் ஒரு கோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தருவதாக அறிவித்து உள்ளார். அவர் எப்போதுமே தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர் என்பதால் இது ஒன்றும் ஆச்சரியமில்லை. இனிமேலாவது பாதுகாப்பு அம்சங்களை கணக்கில் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ராதாரவி கூறியுள்ளார்

More News

1800 ஆண்டு கால தங்கப் புதையல், மறக்கடிக்கப்பட்ட வரலாறு – கோலார் KGF

“பூமியை உள்ளே பிளந்து கொண்டு கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்” இதுதான் கோலார் தங்கவயல் பகுதியில் இன்றைக்கும் உலவிக் கொண்டு இருக்கும் ஒரு பழமொழி.

விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? கே.எஸ்.அழகிரி பதில்!

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குரல் கொடுத்தனர்.

பின் தொடர்ந்த ரசிகரை எச்சரித்த சமந்தா: வைரலாகும் வீடியோ

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும்

1947 லிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பா.ஜ.க. வின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது

நாடு முழுவதும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.