ஆங்கில படத்திற்கு நிகராக படம் எடுத்தால் மட்டும் போதாது: 'இந்தியன் 2'விபத்து குறித்து ராதாரவி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தமிழ் படங்கள் எடுத்தால் மட்டும் போதாது ஆங்கில படத்தின் படப்பிடிப்பின்போது இருக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்
சமீபத்தில் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதில் ஒருவர் சந்திரன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வந்த நடிகர் ராதாரவி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’சந்திரன் அவர்கள் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். அவர் இறந்துவிட்டார் என்பதற்காக சொல்லவில்லை அவர் இருந்தாலும் இதையேதான் சொல்லி இருப்பேன். சந்திரன் கரடுமுரடாக பேசக்கூடியவர் என்றாலும் பலாப்பழம் போன்று உள்ளே இனிப்பான குணத்தை உடையவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்
ஆங்கிலப் படத்திற்கு இணையாக தமிழ் படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. ஆங்கில படங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும். ஹாலிவுட்டில் படம் எடுப்பவர்கள் படக்குழுவினர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது போது நம் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்
மேலும் நண்பர் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் ரூபாய் ஒரு கோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தருவதாக அறிவித்து உள்ளார். அவர் எப்போதுமே தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர் என்பதால் இது ஒன்றும் ஆச்சரியமில்லை. இனிமேலாவது பாதுகாப்பு அம்சங்களை கணக்கில் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ராதாரவி கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout